ஆட்டோமொபைல்
ஹூன்டாய் எலான்ட்ரா

ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல்

Published On 2019-09-16 10:02 GMT   |   Update On 2019-09-16 10:02 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.



ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்த கார் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. காரின் வெளிப்புறம் கூர்மையான ஸ்டைலிங் மற்றும் ரீடன் கேபின் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எலான்ட்ரா கார் பெட்ரோல்  என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தெரிகிறது.



இந்த பெட்ரோல் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜுலை 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஹூன்டாய் நிறுவனம் 214 பெட்ரோல் எலான்ட்ரா வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் அந்நிறுவனம் வெறும் 90 டீசல் எலான்ட்ரா மாடல்களையே விற்பனை செய்திருக்கிறது.

டீசல் மாடல்களின் விற்பனை குறைந்து வருவதால் ஹூன்டாய் நிறுவனம் புதிய எலான்ட்ரா மாடலை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் எலான்ட்ரா மாடலில் 128 பி.ஹெச்.பி., 1.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் வெர்னா மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News