ஆட்டோமொபைல்
யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 அறிமுகம்

Published On 2019-09-05 07:34 GMT   |   Update On 2019-09-05 07:34 GMT
ஜப்பானின் யமஹா நிறுவனம் புதிதாக எக்ஸ்.எஸ்.ஆர்155 எனும் மாடல் மோட்டார் சைக்கிளை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது.
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜப்பானின் யமஹா நிறுவனம் புதிதாக எக்ஸ்.எஸ்.ஆர்155 எனும் மாடல் மோட்டார் சைக்கிளை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்.எஸ்.ஆர். சீரிஸில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் மோட்டார் சைக்கிள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்போர்ட்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டது. தாய்லாந்தில் இதன் விலை 91,500 தாய் பாட் ஆகும். இந்திய மதிப்பின்படி இது ரூ.2.12 லட்சம். தாய்லாந்து சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது 155 சி.சி திறன் கொண்டது. யு.எஸ்.டி. போர்க் கொண்ட இந்த மாடல் 19.3 ஹெச்.பி. திறன் மற்றும் 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 6 கியர்களைக் கொண்ட இந்த மாடல் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. யமஹா நிறுவனம் 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் தயாரித்த மாடல் மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கு வட்ட வடிவில் இருக்கும்.

இதை பின்பற்றி இந்த மாடலில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகளை வடிவமைத்துள்ளது யமஹா. இதுவே இந்த மோட்டார் சைக்கிளுக்கு மிகவும் எடுப்பான தோற்றத்தைக் கொடுக்கிறது. டிஜிட்டல் திரையைக் கொண்டது. இதன் எடை 134 கிலோவாகும்.
Tags:    

Similar News