ஆட்டோமொபைல்
எகியூரி இகோஸ் எல்.எம் 69

ஜாகுவாரை தழுவி உருவான எகியூரி இகோஸ் எல்.எம் 69

Published On 2019-08-15 06:14 GMT   |   Update On 2019-08-15 06:14 GMT
ஸ்காட்லாந்தின் ரேஸ் கார் பிராண்டு எகியூரி இகோஸ் ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்.ஜெ.13 மாடலை தழுவி எல்.எம்.69 எனும் காரை உருவாக்கி இருக்கிறது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ரேஸ் கார்களைத் தயாரிக்கும் எகியூரி இகோஸ் நிறுவனம் புதிய மாடல் சூப்பர்காரை உருவாக்கி வருகிறது. ‘எல்.எம் 69’ என்ற பெயரிலான இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.

இதில் 5 லிட்டர் வி 12 என்ஜின் உள்ளது. இந்த காரை வரும் செப்டம்பர் மாதம் 6 முதல் 8-ம் தேதி வரை லண்டனில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட் பேலஸ் எனும் பகுதியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. பந்தய களத்தில் மட்டுமின்றி சாலைகளிலும் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்நிறுவனத் தயாரிப்புகள் 1956-ம் ஆண்டு லெமான்ஸ் பந்தயத்திலும், 1957-ல் ஜாகுவார் டிடைப் கார் பந்தயத்திலும் வெற்றி கோப்பையை பெற்றது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் எல்.எம் 69 பந்தய களத்தில் மட்டுமின்றி சாதாரணமாக சாலைகளிலும் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பந்தயக் களத்தில் இம்முறை கோப்பையை வெல்வதோடு, 25 பிரீமியம் வாடிக்கையாளர்களின் வீடுகளிலும் இடம்பெறப் போகிறது எல்.எம் 69.
Tags:    

Similar News