ஆட்டோமொபைல்
ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கிராண்ட் ஐ10 நியோஸ்

Published On 2019-08-13 10:28 GMT   |   Update On 2019-08-13 10:28 GMT
ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த முதல் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வெளியிட்டுள்ளது.



ஹூன்டாய் இந்தியா நிறுவனம் மூன்றாம் தலைமுறை கிராண்ட் ஐ10 காரின் உற்பத்தி பணிகளை துவங்கியுள்ளது. புதிய கிராண்ட் ஐ10 கார் கிராண்ட் ஐ10 நியோஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

2019 ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் கிராண்ட் ஐ10 மாடலுடன் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கார் நியோஸ் எனும் பிராண்டிங்குடன் விற்பனை செய்யப்படுகிறது.

நியோஸ் என்றால் வாகனத்தின் கோணங்கள், கேபின் ஸ்பேஸ் மற்றும் செயல்திறன உள்ளிட்டவற்றில் அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கும் என பொருள்படும். இந்தியாவில் அறிமுகமானதும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும். 



புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மொத்தம் பத்து வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. அந்த வகையில் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்டான்டர்டு இரா, மேக்மா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா போன்ற ட்ரிம்களில் விற்பனை செய்யப்படலாம்.

என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் CRDi டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 81 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் என்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்படுகிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News