கார்

கார் மாடல்கள் விலையை உயர்த்தும் ஃபோக்ஸ்வேகன் - எப்போ அமலுக்கு வருது தெரியுமா?

Published On 2023-03-22 14:19 GMT   |   Update On 2023-03-22 14:19 GMT
  • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களுக்கு பிஎஸ்6 2 எஞ்சின் வழங்கப்படுகிறது.
  • புதிய மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகபட்சம் ரூ. 36 ஆயிரம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துகிறது. விலை உயர்வு ஃபோக்ஸ்வேகன் டைகுன், விர்டுஸ் மற்றும் டிகுவான் உள்ளிட்ட மாடல்களுக்கு பொருந்தும். இம்முறை கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

தற்போது ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 56 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் கம்ஃபர்ட்லைன், டாப்லைன் மற்றும் ஜிடி பிளஸ் என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ஏப்ரல் முதல் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

விலை உயர்வு தவிர டைகுன் மாடலில் உள்ள எஞ்சின்கள் RDE விதிகள் மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றார் போல் அப்டேட் செய்யப்படுகின்றன. இவற்றுடன் புதிய காரில் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், மி-ஹோம் லேம்ப்கள் என சில புதிய அம்சங்கள் வழங்கப்படலாம்.

 

விர்டுஸ் செடான் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 32 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டாப்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஜிடி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. விர்டுஸ் மாடலின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

பிஎஸ்6 2 அப்டேட் மட்டுமின்றி விர்டுஸ் மாடலில் ரியர் ஃபாக் லேம்ப்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. டிகுவான் மாடல் எலிகன்ஸ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 33 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் விலை பிஎஸ்6 2 அப்டேட்டிற்கு ஏற்ப அதிகரிக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News