கார்

சிட்ரோயன் எலெக்ட்ரிக் ஹேச்பேக் டெஸ்ட் டிரைவ் துவக்கம்

Published On 2023-02-24 10:18 GMT   |   Update On 2023-02-24 10:18 GMT
  • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
  • புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் காரில் 29.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் விற்பனை மையங்களை வந்தடைந்துள்ளது. புதிய சிட்ரோயன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிட்ரோயன் eC3 டெஸ்ட் டிரைவ் துவங்கி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் ஃபீல் மற்றும் லைவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தோற்றத்தில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மற்றும் அதன் IC என்ஜின் வெர்ஷன் ஒரே மாதரியே காட்சியளிக்கிறது. இரு கார்களிலும், செவ்ரன் லோகோ முன்புற கிரில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களை போன்று, eC3 மாடலில் க்ளோஸ்டு கிரில் அல்லது பெட்ரோல் மாடலில் இருப்பதை விட முற்றிலும் புது முன்புறத்தை பெறவில்லை.

 

இரு கார்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசமாக காரின் வெளிப்புறம் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் eC3 பேட்ஜ்கள் உள்ளன. இந்த காரில் சார்ஜிங் போர்ட் முன்புறம் வலதுபுற ஃபெண்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மோனோக்ரோம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.

இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. டச் ஸ்கிரீன், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஒட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை ஃபீல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சிட்ரோயன் eC3 மாடலில் 29.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 57 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.

Tags:    

Similar News