கார்

இணையத்தில் வெளியான ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

Update: 2022-11-22 10:09 GMT
  • எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முற்றிலும் புதிய முகப்பு தோற்றம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவி மாடலாக விளங்குகிறது. டாடா ஹேரியர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா XUV700, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எம்ஜி ஹெக்டார் போட்டியாக அமைகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டை சமீபத்தில் தான் எம்ஜி மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த கார் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில், புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹெக்டார் மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காட்சியளிக்கிறது. அதன்படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Photo Courtesy: MotorBeam

Tags:    

Similar News