கார்

கோப்புப்படம் 

நெக்சானுக்கு போட்டியாக புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யும் எம்.ஜி. மோட்டார்ஸ்

Published On 2024-03-18 12:26 GMT   |   Update On 2024-03-18 12:26 GMT
  • புதிய கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.
  • முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டம்.

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்காக புதிய பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த பெயரில் தான் எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் எக்செல்லார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் எம்.ஜி. நிறுவனம் எந்த மாடலுக்கும் எக்செல்லார் பெயரை பயன்படுத்துவதில்லை. அந்த வகையில், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

 


இந்த எலெக்ட்ரிக் கார் கொமெட் மற்றும் ZS EV மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக அமையும். மார்ச் 20-ம் தேதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில், புதிய எக்செல்லார் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்டிங் செய்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News