கார்

இணையத்தில் லீக் ஆன எம்ஜி ஹெக்டார் வெளியீட்டு விவரம்

Update: 2022-11-28 10:40 GMT
  • எம்ஜி மோட்டார் நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீட்டை ஒட்டி இந்த காருக்கான டீசர்கள் வெளியாகி வருகின்றன.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டிசம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேம்பட்ட புதிய எஸ்யுவி ஏராளமான மாற்றங்களுடன், புது ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த காரில் மெக்கானிக்கல் அம்சங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

புதிய எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் முன்புற கிரில் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புற தோற்றம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. முந்தைய ஸ்பை படங்களின் படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News