கார்
3 சக்கர மின்சார வாகன விற்பனை: யூலர் மோட்டார்ஸ் உடன் இணைந்த ஹீரோ மோட்டோகார்ப்
- யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.