கார்

கார் மாடலுக்கு ரூ.2.62 லட்சம் தள்ளுபடி வழங்கும் நிறுவனம்

Published On 2024-06-21 13:43 IST   |   Update On 2024-06-21 13:43:00 IST
  • சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகும்.
  • விவரங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலரை தொடர்புகொள்ளலாம்.

பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் சிட்ரோயன். தனது பிரபலமான SUV-வின் மிட் ரேஞ்ச் வேரியண்டுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிய சி3 ஏர்கிராஸ் டோனி மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.11.82, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகும்.

இவற்றில் மிட் ரேஞ்ச் வேரியண்ட் பிளஸ் வகை கார்கள் ரூ.2.62 லட்சம் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி காரின் குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.


இதற்கு முன்பு சி3 ஏர்கிராஸ் பிளஸ் மாடலின் ஆரம்ப விலையாக ரூ.11.61 லட்சம் என ஷோரூமில் விற்பனையான நிலையில் இனி ரூ.8.99 லட்சமாக விற்பனையாகும்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை டீலருக்கு டீலர் மாறுபடும். இது தொடர்பான விவரங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலரை தொடர்புகொள்ளலாம்.

Tags:    

Similar News