கார்

இ- கார் விற்பனை: டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி சீனாவின் பி.ஒய்.டி நிறுவனம் முதலிடம்

Published On 2024-01-11 12:37 GMT   |   Update On 2024-01-11 12:37 GMT
  • சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.
  • பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம்.

சீனாவின் பி.ஒய்.டி, முதல் முறையாக உலகின் சிறந்த மின்சார-வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.

சீனாவை சார்ந்த பி.ஒய்.டி நிறுவனம் முதல் முறையாக உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்கின் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம். 

கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா குழுமம் 4,84,000 வாகனங்களை வழங்கியுள்ளது, ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள 473,000 வாகனங்களை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் பி.ஒய்.டி அதே நேரத்தில் 5,26,000 பேட்டரி வாகன விற்பனையை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்க கொண்டது.

டெஸ்லா 1.8 மில்லியன் ஆட்டோமொபைல்களை விற்றது. பி.ஒய்.டி 1.58 மில்லியன் மின்சார வாகனங்களை வழங்கியது. இந்த சாதனையானது, மின்சார வாகனத் துறையை மேம்படுத்த உதவுவதில் நிறுவனம் கொண்ட முயற்சி. பி.ஒய்.டி நிறுவனம், நுகர்வோரை சீனாவின் குறைந்த விலை மின்சார வாகனங்களை வாங்க தூண்டியது. 

நிருபர்களின் கூற்றுப்படி, பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம். அவை மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த கூறுகளில் ஒன்று. பி.ஒய்.டி-ன் போட்டியாளர்கள் பலர் மூன்றாம் தரப்பு பேட்டரி தயாரிப்பாளர்களை சார்ந்துள்ளனர்.

ஆனால் பி.ஒய்.டி நிறுவனம் தானே பேட்டரி தயாரிப்பதால் இந்த சாதனை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News