ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 வினியோகம் செய்ய மெகா திட்டம் போடும் மஹிந்திரா

Published On 2021-10-28 11:20 GMT   |   Update On 2021-10-28 11:20 GMT
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.700 வினியோக விவரங்கள் வெளியாகி உள்ளது.


மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 விரைவில் இந்திய சாலைகளில் வலம்வர இருக்கிறது. புதிய பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி.700 மாடலின் வினியோகம் இந்தியாவில் அக்டோபர் 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க இதுவரை சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக பெட்ரோல் யூனிட்களை வினியோகம் செய்யப் போவதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக வினியோக திட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.



இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் ரூ. 11.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலை எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது புதிய எக்ஸ்.யு.வி.700 விலை ரூ. 12.49 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News