ஆட்டோமொபைல்
டாடா ஹேரியர் கேமோ எடிஷன்

கார் மாடல் விற்பனையை நிறுத்திய டாடா மோட்டார்ஸ்

Published On 2021-10-01 06:05 GMT   |   Update On 2021-10-01 06:05 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹேரியர் கேமோ எடிஷன் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷன் விற்பனையை நிறுத்தியது. இந்தியாவில் பண்டிகை காலம் துவங்க இருப்பதை ஒட்டி டாடா மோட்டார்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஹேரியர் கேமோ எடிஷன் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மாடல் மொத்தம் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டாடா ஹேரியர் கேமோ எடிஷன் அதன் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 30 ஆயிரம் விலை அதிகம் ஆகும். கேமோ எடிஷன் மாடல் ஆலிவ் கிரீன் நிறத்தில் கிடைத்தது. இந்த கார் தோற்றத்தில் ராணுவ வாகனம் போன்றே காட்சியளிக்கிறது.



ஹேரியர் கேமோ எடிஷனில் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News