ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

சக்திவாய்ந்த என்ஜின் பெறும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

Published On 2021-09-18 08:46 GMT   |   Update On 2021-09-18 08:46 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் விரைவில் இந்த என்ஜினுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 130 பி.ஹெச்.பி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் வடிவில் ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், இந்த என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 130 பி.ஹெச்.பி. திறன், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.



தற்போதைய எக்ஸ்.யு.வி.300 மாடல் - டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 ஒ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 130 பி.ஹெச்.பி. என்ஜின் டாப் எண்ட் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News