ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான் ஜி.டி.

புது எலெக்ட்ரிக் கார்களின் முன்பதிவை துவங்கிய ஆடி

Published On 2021-09-09 07:09 GMT   |   Update On 2021-09-09 07:12 GMT
ஆடி நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றன.


ஆடி நிறுவனம் இ டிரான் ஜி.டி. சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் கூப் மாடல்களின் முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். இ டிரான் ஜி.டி. மாடலுடன் ஆடி நிறுவனம் ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ஆடி இ டிரான் ஜி.டி. மற்றும் ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடல்களில் 800 வோல்ட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இந்த காரை 270 கிலோவாட் திறன் கொண்ட டி.சி. சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். இ டிரான் மாடல்களை 5 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 22.5 நிமிடங்களே ஆகும்.



இ.பி.ஏ. சோதனைகளில் ஆடி இ டிரான் ஜி.டி. முழு சார்ஜ் செய்தால் 383 கிலோமீட்டர்களும், ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடல் 373 கிலோமீட்டர்களும் செல்லும் என தெரியவந்துள்ளது. ஓவர்பூஸ்ட் மோடில் இ டிரான் ஜி.டி. மாடல் 637 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

Tags:    

Similar News