ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி கார்

ஒரு லட்சம் கார்களை திரும்ப பெறும் மாருதி சுசுகி

Published On 2021-09-04 09:18 GMT   |   Update On 2021-09-04 09:18 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் பெட்ரோல் கார் மாடல்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.


மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்.எல்.6 போன்ற பெட்ரோல் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை சேர்ந்த 1,81,754 யூனிட்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த யூனிட்கள் அனைத்தும் 2018 மே 4 ஆம் தேதி முதல் 2020, அக்டோபர் 27 ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். பாதிக்கப்பட்ட கார்களின் மோட்டார் ஜெனரேட்டர் யூனிட் மாற்றப்பட இருக்கிறது. திரும்ப பெறப்படும் கார்களை ஆய்வு செய்து, பிரச்சினை இலவசமாக சரி செய்யப்படுகிறது.



பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்துவோருக்கு மாருதி சுசுகி அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் மூலம் தகவல் கொடுக்கப்படும். எனினும், கார்களை சரி செய்யும் பணிகள் நவம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருப்போர், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் கார் ஓட்ட வேண்டாம் என மாருதி சுசுகி கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:    

Similar News