ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்

Published On 2021-08-22 04:27 GMT   |   Update On 2021-08-22 04:27 GMT
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மாடல் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் நான்காம் தலைமுறை சிட்டி மாடலுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா சிட்டி மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருந்தது. இந்த நிலையில், புதிய ஹைப்ரிட் மாடல் அடுத்த நிதியாண்டில் தான் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.


2022 முதல் காலாண்டிற்கு பிறகு தான் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் விற்பனையகங்களுக்கு வரும் என கூறப்படுகிறது. சிட்டி ஹைப்ரிட் மாடலில் 98 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் 109 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.

இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இந்த கார் முழுமையாக இ.வி. மோடில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் செட்டப் உடன் சி.வி.டி. யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 27.78 கிலோமீட்டர் வரை செல்லும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News