ஆட்டோமொபைல்
ஸ்கோடா குஷக்

ஸ்கோடா குஷக் டாப் எண்ட் மாடல் வினியோகம் துவக்கம்

Update: 2021-08-16 07:29 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் இந்தியாவில் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


ஸ்கோடா நிறுவனம் குஷக் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட மாடல்களை இந்தியாவில் வினியோகம் செய்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு குஷக் அறிமுக நிகழ்வின் போதே துவங்கியது. எனினும், தற்போது தான் இந்த மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது.இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடலின் விற்பனை ஜூன் 28 ஆம் தேதி துவங்கியது. இதுவரை இந்த மாடல் 4 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மூன்று வேரியண்ட்கள், இருவித என்ஜின் ஆப்ஷன்கள், 3 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் லிட்டருக்கு 17.95 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News