ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐ20 என் லைன்

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-08-13 07:28 GMT   |   Update On 2021-08-13 08:04 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ20 என் லைன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.


ஹூண்டாய் நிறுவனம் ஐ20 என் லைன் மாடலை ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. 

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் - என்6 மற்றும் என்8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. என் லைன் மாடல் ஐ20 ஆஸ்டா வேரியண்டை தழுவி உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் ஐ.எம்.டி. யூனிட் ஸ்டான்டர்டு அம்சமாகவும், டாப் எண்ட் என்8 வேரியண்ட்டில் டி.சி.டி. யூனிட் வழங்கப்படுகிறது.

தோற்றத்தில் ஐ20 என் லைன் மாடலில் 17 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல், ஸ்போர்ட் பம்ப்பர், ரியர் டிப்யூசர், டூயல் எக்சாஸ்ட் டெயில்பைப், ஸ்போர்ட் கலர் மற்றும் காண்டிராஸ்ட் நிற ரூப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் ஸ்போர்ட் இருக்கைகள், காண்டிராஸ்ட் ரெட் ஸ்டிட்ச் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News