ஆட்டோமொபைல்
ரெனால்ட் கைகர்

அசத்தல் அம்சங்களுடன் ரெனால்ட் கைகர் இந்தியாவில் அறிமுகம்

Update: 2021-08-07 10:41 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர் RXT (O) காரை அறிமுகம் செய்தது. கைகர் மாடலின் புது வேரியண்ட் விலை ரூ. 7.37 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் டாப் எண்ட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

புதிய கைகர் RXT (O) 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் டாப் எண்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் எல்.இ.டி. ஹெட்லேம்ப், 16 இன்ச் அலாய் வீல்கள், PM 2.5 AC பில்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள என்ஜின் 72 பி.எஸ். திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

இந்திய சந்தையில் புதிய கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்சான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News