ஆட்டோமொபைல்
கியா கார்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய கியா இந்தியா

Published On 2021-08-06 10:27 GMT   |   Update On 2021-08-06 10:27 GMT
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கிய முதல் ஆண்டிலேயே 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்தது.


இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கார் உற்பத்தியாளராக கியா இந்தியா இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் அதிவேகமாக மூன்று லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக கியா இந்தியா உருவெடுத்து இருக்கிறது. 



கொரியாவை சேர்ந்த கியா இந்தியா விற்பனை துவங்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது இரண்டே ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

கியா செல்டோஸ் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஒட்டுமொத்த விற்பனையில் 66 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கியா சொனெட் மாடல் 32 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் 7310 கியா கார்னிவல் எம்.பி.வி. யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

Tags:    

Similar News