ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ. 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷன்

பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் புது மாடல் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-08-04 07:32 GMT   |   Update On 2021-08-04 07:32 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் செடான் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.


பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் (Individual) எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. துவக்க விலை ரூ. 1.42 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பி.எம்.டபிள்யூ. செடான் மாடலின் லிமிடெட் எடிஷன் ஒற்றை வேரியண்டில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இன்டிவிஜூவல் அக்சஸரீக்களை கொண்டிருக்கிறது.

புதிய ஆடம்பர செடான் மாடலுக்கான முன்பதிவு பி.எம்.டபிள்யூ. அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷன் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த செடான் மாடல் டன்ஸனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது.



பி.எம்.டபிள்யூ. 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷனில் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு டர்போ சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. செடான் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. பி.எம்.டபிள்யூ. 740Li M- ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், கம்பர்ட், கம்பர்ட் பிளஸ், இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஆறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News