ஆட்டோமொபைல்
மஹிந்திரா XUV700

அடுத்த மாதம் இந்தியா வரும் மஹிந்திரா XUV700?

Published On 2021-07-21 07:27 GMT   |   Update On 2021-07-21 07:27 GMT
மஹிந்திரா நிறுவனம் XUV700 எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய XUV700 மாடலுக்கான அம்சங்கள் ஒவ்வொன்றையும் டீசர் வடிவில் மஹிந்திரா வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த காரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக புதிய தலைமுறை தார் மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்தது. அந்த வகையில் மஹிந்திராவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடலை மஹிந்திரா இந்த தினத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய மஹிந்திரா XUV700 பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.



புதிய XUV700 மாடலில் - பிளஷ் கைப்பிடிகள், ஸ்கை-ரூப் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ ஹெட்லேம்ப் இன்டென்சிட்டி பூஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இத்துடன் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், ரேடார் சார்ந்து இயங்கும் குரூயிஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா தனது XUV700 மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின்களை வழங்க இருக்கிறது. இவை முறையே 200 பி.ஹெச்.பி. பவர், 185 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News