ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் மேபக் GLS600

அடுத்த வாரம் இந்தியா வரும் 2021 மெர்சிடிஸ் மேபக் GLS600

Published On 2021-06-03 06:58 GMT   |   Update On 2021-06-03 06:58 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர எஸ்யுவி மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேபக் GLS600 ஆடம்பர எஸ்யுவி மாடலை இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. GLS600 மெர்சிடிஸ் மேபக் சீரிசில் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். முன்னதாக 2019 வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகின் மற்ற சந்தைகளில் இது விற்பனை செய்யப்படுகிறது.



மேபக் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது GLS600 மேபக் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. GLS600 மேபக் பிஸ்போக் அம்சங்கள், உள்புறம் ஆடம்பர அம்சங்கள் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வெளிப்புறத்தில் உள்ள ட்ரிம் பீஸ்கள் குரோம் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

மெர்சிடிஸ் மேபக் GLS600 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 550 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் இகியூ பூஸ்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் கொண்டுள்ளது. இது 249 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News