ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா விலை மீண்டும் மாற்றம்

Published On 2021-04-28 08:34 GMT   |   Update On 2021-04-28 08:34 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புது கிரெட்டா எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிரெட்டா 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கிரெட்டா மாடல் E, EX, S, SX மற்றும் SX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.



இந்த ஆண்டு துவக்கத்தில் புது கிரெட்டா மாடல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது கிரெட்டா மாடல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின்படி கிரெட்டா டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 19,600 வரையிலும், பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 13,600 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தற்போது கிரெட்டா பெட்ரோல் வேரியண்ட்கள் விலை ரூ. 9,99,990 என  துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,67,400 என மாறி இருக்கிறது. டீசல் வேரியண்ட் பேஸ் மாடல் விலை ரூ. 10,51,000 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,62,400 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News