ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கார்

எஸ்யுவி விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஹூண்டாய்

Published On 2021-04-07 06:57 GMT   |   Update On 2021-04-07 06:57 GMT
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மூன்று மாடல்கள், ஒரு சிகேடி மாடல் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும். 

2015 ஆம் ஆண்டு முதல் தலைமுறை கிரெட்டா மாடலை கொண்டு இந்த பயணம் துவங்கியது. இது ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களில் அதிக யூனிட்கள் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. 



2019 ஆம் ஆண்டு வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் போதே ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துவிட்டது. இதே ஆண்டில் ஹூண்டாய் தனது கோனா எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது. 

தற்போது எஸ்யுவி மாடல்களில் பத்து லட்சம் யூனிட்களை கடந்து இருக்கும் நிலையில், ஹூண்டாய் வென்யூ, கிரெட்டா, டக்சன் மற்றும் கோனா எலெக்ட்ரிக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கோனா எலெக்ட்ரிக் தவிர மற்ற அனைத்து மாடல்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. கோனா எலெக்ட்ரிக் சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
Tags:    

Similar News