ஆட்டோமொபைல்
நிசான் கார்

நிசான் இந்தியா மார்ச் மாத வாகன விற்பனை விவரம் வெளியீடு

Published On 2021-04-06 07:09 GMT   |   Update On 2021-04-06 07:09 GMT
நிசான் நிறுவனம் மார்ச் 2021 மாத விற்பனையில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


நிசான் இந்தியா நிறுவனம் மார்ச் 2021 மாதத்தில் மட்டும் 4,012 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. இதில் பெரும்பாலான யூனிட்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் மாடல் ஆகும். 2020-21 நிதியாண்டில் நிசான் ஆறு சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



விற்பனைக்கு பிந்தைய சர்வீசை மேம்படுத்த நிசான் சமீபத்தில் எக்ஸ்பிரஸ் சக்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் 90 நிமிடங்களில் கார் சர்வீஸ் செய்யப்பட்டு விடும். இதுதவிர நாடு முழுக்க 100-க்கும் அதிக பகுதிகளில் நிசான் சர்வீஸ் கிளினிக்-களை செயல்படுத்துகிறது.

நிசான் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை சர்வீஸ்  செய்ய நிசான் சர்வீஸ் ஹப் வலைதளம் அல்லது நிசான் கனெக்ட் தளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இத்துடன் நாடு முழுக்க சுமார் 1500-க்கும் அதிக நகரங்களில் நிசான் 24 மணி நேர ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் வசதியை வழங்குகிறது.
Tags:    

Similar News