ஆட்டோமொபைல்
பென்ட்லி கார்

உற்பத்தியில் புது மைல்கல் கடந்த பென்ட்லி

Published On 2021-03-30 06:17 GMT   |   Update On 2021-03-30 06:17 GMT
ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பென்ட்லி புது மைல்கல் பற்றிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

பென்ட்லி நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் உற்பத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 1919 ஆண்டு துவங்கப்பட்ட பென்ட்லி 101 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரியம் மிக்க கார் மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது உற்பத்தியில் 2 லட்சம் கார்களை கடந்து இருப்பதாக பென்ட்லி அறிவித்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி ஆடம்பர கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் புளோயர், அர்னேஜ், மல்சேன், கான்டினென்டல் ஜிடி என பல்வேறு தலைசிறந்த மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.



2 லட்சம் யூனிட்களில் சுமார் 1,55,582 யூனிட்கள் 2003 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். தற்போது பென்ட்லி நிறுவனம் கான்டினென்டல், பிளையிங் ஸ்பர் மற்றும் பென்ட்யகா போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்கள் மற்றும் சப்-வேரியண்ட்கள் இங்கிலாந்தில் உள்ள தலைமையகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

Tags:    

Similar News