ஆட்டோமொபைல்
போக்ஸ்வேகன் கார்

இந்தியாவுக்கு நான்கு எஸ்யுவிக்கள் - போக்ஸ்வேகன் அசத்தல் திட்டம்

Published On 2021-03-25 08:49 GMT   |   Update On 2021-03-25 08:49 GMT
இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல்கள் விவரங்களை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.


போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இந்த ஆண்டு மட்டும் நான்கு புது எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு புதிய மாடல்களில் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலான டைகுன் மிகப்பெரும் மாடலாக இருக்கும். 

இந்த மாடலின் சரியான வெளியீட்டு விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுதவிர டி-ராக் மற்றும் டைகுன் ஆல்ஸ்பேஸ் போன்ற மாடல்கள் இந்தியாவில் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புது மாடல்கள் வரிசையில், ஐந்து பேர் பயணிக்கக்கூடிய டைகுன் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என தெரிகிறது.



புதிய டைகுன் மாடல் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி மாடலில் சதுரங்க வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், 2-ஸ்லாட் குரோம் கிரில், சில்வர் பேஷ் பிளேட்கள், கேபின் பகுதியில் 2-டோன் பினிஷ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச்-ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

டி-ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்கள் இந்தியாவில் எவ்வித மாற்றமும் இன்றி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு எஸ்யுவி மாடல்களும் கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் டி ராக் மாடல் இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்தது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News