ஆட்டோமொபைல்
ஸ்கோடா குஷக்

சர்வதேச சந்தையில் ஸ்கோடா குஷக் அறிமுகம்

Published On 2021-03-19 09:40 GMT   |   Update On 2021-03-19 09:40 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.


ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய குஷக் எஸ்.யு.வி. இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளியாகும் முதல் மாடல் ஆகும். இந்த எஸ்.யு.வி. போக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது இந்திய சந்தைக்கென உருவாகி இருக்கிறது.

புதிய ஸ்கோடா கார் எல்.இ.டி. ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப் யூனிட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கார்னெரிங் லைட்கள், இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 



பாதுகாப்பிற்கு ஸ்கோடா குஷக் மாடலில் ஹில்-ஹோல்டு அசிஸ்ட், 6 ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, இபிஎஸ், மல்டி-கொலிஷன் பிரேக், டி.பி.எம்.எஸ்., ரியர் பார்கிங் சென்சார், ரியர்வியூ கேமரா, ISOFIX உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஸ்கோடா குஷக் மாடல் போக்ஸ்வேகன் குழுமத்தின் 1.0 டி.எஸ்.ஐ. யூனிட், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. 1.0 லிட்டர் யூனிட் 113 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இதன் 1.5 லிட்டர் யூனிட் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News