ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

விற்பனையில் அசத்தும் 2020 ஹூண்டாய் கிரெட்டா

Published On 2021-03-18 06:59 GMT   |   Update On 2021-03-18 06:59 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் விற்பனை துவங்கிய ஒரே ஆண்டில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.


2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 2020 கிரெட்டா மாடல் இந்தியாவில் 1.21 லட்சத்திறஅகும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்து உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா மாடல் 2020 பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இந்த மாடலை சுமார் 1.21 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி இருக்கின்றனர். இதில் கிரெட்டா SX மற்றும் SX(O) வேரியண்ட்கள் மட்டும் 51 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. 



இந்திய சந்தையில் விற்பனையான மொத்த கிரெட்டா மாடல்களில் 60 சதவீத யூனிட்கள் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டவை ஆகும். அதாவது 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் டீசல் வேரியண்ட்கள் ஆகும். பிஎஸ்6 புகை விதிகள் அமலான போதும், டீசல் என்ஜின் ஆதிக்கம் தொடர்வதற்கு இதுவே சான்றாக அமைகிறது. 

மேலும் இதுவரை விற்பனையான யூனிட்களில் 20 சதவீதம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டவை ஆகும். இந்த மாடல் பல்வேறு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5.8 லட்சத்திற்கும் அதிக கிரெட்டா யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
Tags:    

Similar News