ஆட்டோமொபைல்
விட்டாரா பிரெஸ்ஸா

விற்பனையில் புது மைல்கல் கடந்த மாருதி கார்

Published On 2021-03-06 09:11 GMT   |   Update On 2021-03-06 09:11 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தனது எஸ்யுவி மாடல் இது தான் என அறிவித்து இருக்கிறது.


மாருதி  சுசுகி நிறுவனத்தின் எஸ்யுவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா இந்திய சந்தையில் ஆறு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த மைல்கல் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் எட்டியுள்ளது. 

இந்தியாவில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் பிரெஸ்ஸா மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே ஆண்டில் விட்டாரா பிரெஸ்ஸா ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. 

அதிக வரவேற்பை தொடர்ந்து இந்த எஸ்யுவி ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் அக்டோபர் 2017 வாக்கில் இது இரண்டு லட்சம் யூனிட்களை கடந்தது. இந்த இலக்கை மாருதி சுசுகி ஒன்பது மாதங்களில் எட்டியது. முதற்கட்டமாக பிரெஸ்ஸா மாடல் 1.3 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 



இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. இதன்பின் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இது 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

2019 பிப்ரவரி மாதத்தில் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் நான்கு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்தது. பின் 2019 டிசம்பரில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. கடந்த மாதம் பிரெஸ்ஸா மாடல் 11,585 யூனிட்கள் விற்பனையானது. 
Tags:    

Similar News