ஆட்டோமொபைல்
டாடா டியாகோ XTA

ரூ. 5.99 லட்சம் விலையில் டாடா டியாகோ புது வேரியண்ட் அறிமுகம்

Published On 2021-03-05 06:47 GMT   |   Update On 2021-03-05 06:47 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மாடலின் XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய XTA வேரியண்ட் ஏஎம்டி யூனிட் கொண்டுள்ளது. இது XT மேனுவல் வேரியண்டை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும். தற்போது டியாகோ மாடல் - XTA, XZA, XZA+ மற்றும் XZA+ டூயல் டோன் என நான்கு ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.



புதிய XTA மாடல் டியாகோ XT வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் வெளிப்புறம் கார் நிறத்திலான ORVMகள், இன்டிகேட்டர்கள், பம்ப்பர்கள் மற்றும் பூமராங் வடிவ டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் ஹார்மன் இன்போடெயிமென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

டியாகோ XTA மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டியாகோ மாடல் மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News