ஆட்டோமொபைல்
2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட்

2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-24 09:49 GMT   |   Update On 2021-02-24 09:49 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ மற்றும் ZXi+ டூயல் டோன் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய ஸ்விப்ட் மாடல் பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் சாலிட் பயர் ரெட், பியல் மிட்நைட் பிளாக் ரூப் மற்றும் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் வைட் ரூப் போன்ற டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டூயல் டோன் ஆப்ஷன் ZXi+ வேரியண்ட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. 

இத்துடன் ப்ரோஜக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், அலாய் வீல்கள், புளோட்டிங் ரூப் எபெக்ட் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. உள்புறம் 4.2 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே கொண்ட ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. 



புதிய ஸ்விப்ட் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம், ஆட்டோ-போல்டு வசதி கொண்ட ORVMகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன்புறம் சீட் பெல்ட் ரிமைன்டர், ISOFIX பாயிண்ட்கள் வழங்கப்படுகின்றன. 

2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கே12 சீரிஸ் டூயல் ஜெட் டூயல் விவிடி யூனிட் ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 23.20 கிலோமீட்டரும், ஏஎம்டி கியர்பாக்சில் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. செயல்திறனும் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் 89 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News