ஆட்டோமொபைல்
எம்ஜி இசட்எஸ்

புதிய பெயரில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட்?

Published On 2021-02-19 10:09 GMT   |   Update On 2021-02-19 10:09 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் புதிய பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் எஸ்யுவி மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய இசட்எஸ் பெட்ரோல் மாடல் ஆஸ்டர் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

புது வேரியண்ட் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெயினுக்கு மாற்றாக பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது. புதிய மாடல்- 111பிஎஸ்/160 என்எம் டார்க் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட், 120பிஎஸ்/150 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 160பிஎஸ்/230என்எம் டார்க் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

என்ஜின் மட்டுமின்றி புதிய மாடலில் மேம்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப், ஆங்குலர் டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை விட வித்தியாசமாக உள்ளது. அலாய் வீல், டெயில் லேம்ப் மற்றும் இதர பாகங்களில் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் புதிய எம்ஜி இசட்எஸ் மாடல் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. மேலும் இது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
Tags:    

Similar News