ஆட்டோமொபைல்
ரெனால்ட் கைகர்

ரூ. 5.45 லட்சத்தில் ரெனால்ட் கைகர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-16 09:49 GMT   |   Update On 2021-02-16 09:49 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 5.45 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனால்ட் கைகர் மாடல் முன்பதிவு துவங்கி நாடு முழுக்க நடைபெற்று வருகிறது. புதிய கைகர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.



இத்துடன் ஐஸ் கூல் வைட், பிளானெட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், கேஸ்பியன் புளூ மற்றும் ரேடியன்ட் ரெட் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த நிறங்கள் அனைத்தும் டூயல்-டோன் ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது. டூயல் டோன் வேரியண்ட் விலை சிங்கில் டோன் மாடலை விட ரூ. 17 ஆயிரம் அதிகம் ஆகும்.

ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 72 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

ரெனால்ட் நிறுவனம் புதிய கைகர் மாடலை விற்பனையகங்களுக்கு அனுப்ப துவங்கி உள்ள நிலையில், இந்த மாடலுக்கான வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News