ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் அறிமுகம்

Published On 2021-01-22 10:21 GMT   |   Update On 2021-01-22 10:21 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் துவக்க விலை ரூ. 51.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய லிமோசின் வெர்ஷன் ஸ்டான்டர்டு 3 சீரிஸ் சலூன் மாடலின் நீண்ட வீல்-பேஸ் கொண்ட வேரியண்ட் ஆகும். 3 சீரிஸ் ஸ்டான்டர்டு மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கிரான் லிமோசின் மாடல் 2 பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 53.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிரான் லிமோசின் மாடலுக்கான முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 



புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News