மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது.
கார் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்திய மாருதி சுசுகி
பதிவு: ஜனவரி 20, 2021 15:28
மாருதி சுசுகி கார்
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படுகிறது.
ஆல்டோ, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது. மாருதி டூர் எஸ் மாடலின் விலையில் ரூ. 5061 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்விப்ட் மற்றும் எர்டிகா போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்படு இருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, ஆல்டோ, டிசையர் மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 12,500, ரூ. 14 ஆயிரம் மற்றும் ரூ. 23 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.
முன்னதாக டிசம்பர் 2020 மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது விலையை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. அதன்படி விலை உயர்வு தற்சமயம் அமலாகி இருக்கிறது.
Related Tags :