ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐ20

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மேட் இன் இந்தியா ஹூண்டாய் கார்

Published On 2021-01-05 10:29 GMT   |   Update On 2021-01-05 10:29 GMT
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேட் இன் இந்தியா ஹூண்டாய் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது மேட்-இன்-இந்தியா ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு தென் ஆப்பிரிக்கா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

மத்திய அரசின் ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் தனது மாடலை இந்தியாவில் இருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு முதல் தனது ஐ20 மாடலை ஏற்றுமதி செய்து வருகிறது.



நவம்பர் 2020 வரை மட்டும் ஹூண்டாய் நிறுவனம் பழைய ஐ20 மாடல்களில் 5.16 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை ஏற்றுமதி செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 30 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 88 நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளராகவும் ஹூண்டாய் இருக்குகிறது.
Tags:    

Similar News