ஆட்டோமொபைல்
டெஸ்லா கார்

டெஸ்லா மாடல் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-12-28 10:25 GMT   |   Update On 2020-12-28 10:25 GMT
டெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் 3 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இன்க் இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகிறது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மாடல் 3, மாடலை முதற்கட்டமாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் ஜூன் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



மேலும் டெஸ்லா மாடல் 3 முன்பதிவு ஜனவரி 2021 வாக்கில் துவங்கலாம் என தெரிகிறது. முன்னதாக 2016 ஆண்டு வாக்கில் மாடல் 3 முன்பதிவு துவங்கியது. எனினும், எலெக்ட்ரிக் வாகன விதிமுறை மற்றும் இறக்குமதி வரி விவகாரங்கள் காரணமாக வெளியீடு தாமதமானது.

டெஸ்லா மாடல் 3 விநியோகம் 2021-22 முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி ரூ. 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் இதன் விற்பனை நேரடியாக டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News