ஆட்டோமொபைல்
ஜீப் காம்பஸ்

ஜீப் காம்பஸ் மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை

Published On 2020-12-22 16:33 IST   |   Update On 2020-12-22 16:33:00 IST
ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


ஜீப் இந்தியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான காம்பஸ் எஸ்யுவி-க்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆண்டு இறுதியை முன்னிட்டு ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறுபடும்.

இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஸ்போர்ட் பிளஸ், லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட்ட பிளஸ், நைட் ஈகிள் மற்றும் ஹார்டுகோர் டிரெயில்ஹாக் என ஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப் எண்ட் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் அக்சஸரீ உள்ளிட்ட வகைகளில் வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்குவோருக்கு சலுகைகள் வெவ்வேறு வகைகளில் வழங்கப்படுகின்றன.

Similar News