ஆட்டோமொபைல்
நெக்சான் இவி

டாடா நெக்சான் இவி சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம்

Published On 2020-12-10 09:21 GMT   |   Update On 2020-12-10 09:21 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலுக்கான சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கான சந்தா விலையை தற்காலிகமாக குறைத்து உள்ளது. அதன்படி டாடா நெக்சான் இவி சந்தா மாதம் ரூ. 29,500 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நெக்சான் இவி சந்தா விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 41,500 இல் இருந்து ரூ. 34,900 ஆக குறைக்கப்பட்டது. இந்த விலை நெக்சான் இவி 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திற்கு டெல்லி பகுதியில் மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



டாடா நெக்சான் இவி சந்தா விலை ஒவ்வொரு நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பெங்களூரு, ஐதராபாத், பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் நெக்சான் இவி கிடைக்கிறது. டாடா நெக்சான் இவி சந்தா முறை 12, 24 அல்லது 36 மாதங்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News