ஆட்டோமொபைல்
நெக்சான் எலெக்ட்ரிக்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய நெக்சான் எலெக்ட்ரிக்

Published On 2020-12-04 15:03 IST   |   Update On 2020-12-04 15:03:00 IST
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் இவி அந்நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். 

இந்திய சந்தையில் பத்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் 2 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தமாக 2200 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.



முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் மற்றொரு ஆயிரம் யூனிட்கள் விற்பனைாகி இருக்கின்றன. இந்த வளர்ச்சி கொண்டு நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளலாம். 

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் நெக்சான் இவி மாடல் 74 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. நெக்சான் இவி மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார், 30.20kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பவர்டிரெயின் 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Similar News