ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐ20

20 நாட்களில் இத்தனை யூனிட்களா? முன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் கார்

Published On 2020-11-21 08:39 GMT   |   Update On 2020-11-21 08:39 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் கார் 20 நாட்கள் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவு துவங்கிய 20 நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

இந்தியாவில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் சுமார் 4 ஆயிரம் யூனிட்களை டெலிவரி செய்ததாக அறிவித்தது. முன்பதிவில் 85 சதவீத யூனிட்கள் ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) ட்ரிம்கள் என ஹூண்டாய் அறிவித்து இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ஆறு சிங்கிள் டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் இது கிடைக்கிறது. 
Tags:    

Similar News