ஆட்டோமொபைல்
நிசான் மேக்னைட்

நிசான் மேக்னைட் உற்பத்தி துவக்கம்

Published On 2020-11-01 04:15 GMT   |   Update On 2020-10-31 11:41 GMT
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை நவம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.



புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News