ஆட்டோமொபைல்
ஸ்கோடா கரோக்

இந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்

Published On 2020-10-29 09:50 GMT   |   Update On 2020-10-29 09:50 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் மாடல் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


ஸ்கோடா இந்தியா தனது கரோக் மாடலை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது கரோக் எஸ்யூவி மாடல் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத் தீர்ந்ததாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்விஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஜாக் ஹாலின்ஸ் கம்ப்லிட்லி பில்ட்-அப் எஸ்யுவிக்கள் இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்ததாக தெரிவித்து இருக்கிறார். 



இந்திய சந்தையில் முதற்கட்டமாக 1000 ஸ்கோடா கரோக் யூனிட்களை கொண்டுவந்தது. ஸ்கோடா கரோக் அறிமுக நிகழ்விலும் அந்நிறுவனம் இதே தகவலை தெரிவித்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவன தலைமை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களில் கரோக் விற்றுத் தீர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்கோடா கரோக் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் கேண்டி வைட், மேஜிக் பிளாக், மேக்னடிக் பிரவுன், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர் மற்றும் குவாட்ஸ் கிரே என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News