ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி பலேனோ

ஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா? விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ

Published On 2020-10-27 15:06 IST   |   Update On 2020-10-27 15:06:00 IST
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் கார் ஐந்து ஆண்டுகள் அதாவது 59 மாதங்களில் எட்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

இந்திய சந்தையில் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 2015 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் ஆனது முதல் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான ஒரே வருடத்தில் இந்த மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 



2017 ஆண்டு வாக்கில் இதன் ஆல்பா வேரியணட்டில் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. பின் மூன்று ஆண்டுகளில் பலேனோ ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பலேனோ மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ மாடல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

Similar News