ஆட்டோமொபைல்
ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-10-15 11:19 GMT   |   Update On 2020-10-15 11:19 GMT
ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அமேஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அந்நிறுவனத்தின் எஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. புதிய மாடலில் ஸ்பெஷல் எடிஷன் லோகோ, மெல்லிய பாடி கிராபிக்ஸ், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.



ஸ்பெஷல் எடிஷன் அமேஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் டீசல் சிவிடி மாடல் ரூ. 9.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர காம்பேக்ட் செடான் மாடலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதில் உள்ள 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 89 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதேபோன்று 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த என்ஜின் 99 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் 79 பிஹெச்பி, 160 என்எம் டார்க் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News