ஆட்டோமொபைல்
கியா செல்டோஸ்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய கியா செல்டோஸ்

Published On 2020-09-05 08:13 GMT   |   Update On 2020-09-05 08:13 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் கார் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.


கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் எஸ்யுவி மாடலை 2019 வாக்கில் அறிமுகம் செய்தது. கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக அமைகிறது. இந்நிலையில், இந்திய விற்பனையில் கியா செல்டோஸ் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை 11 மாதங்களில் கியா செல்டோஸ் எட்டியிருக்கிறது. இதில் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கியா செல்டோஸ் மாடல் இந்திய எஸ்யுவி வாகன விற்பனையில் 9 சதவீத பங்குகளை கொண்டிருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 8 ஆயிரம் செல்டோஸ் யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

கியா செல்டோஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

இவற்றில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், சிவிடி அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News